Sunday, June 20, 2021

 வாழைப்பழ ரவை கேக் ( Banana Sooji Cake )


தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.


இன்னைக்கு தந்தையர் தின சிறப்பாக வீட்டுல வாழைப்பழ ரவை கேக் செஞ்சு இன்ப அதிர்ச்சி ஊட்ட நினைக்கிறவங்களுக்காக தான் இந்த சமையல் குறிப்பு.


இதை குக்கர்லேயும் செய்யலாம் இல்லன்னா ஓவென்லேயும் செய்யலாம்.


தேவையான பொருள்களை  முதல்ல சொல்லிர்றேன்.


1. ரெண்டு கப் ரவை 

2. ஒரு கப் மைதா 

3. ஒரு கப் சர்க்கரை/ வெல்லத்தூள் 

4. ஒரு கப் பால் 

5. அரை கப் எண்ணெய் ( தேங்காய் எண்ணெய் இல்லேன்னா அரை கப் நெய்)

6. மூணு வாழைப்பழம் ( பச்சை நாடன் என்கிற மோரிஸ் பழம் இதுக்கு பசரியா இருக்கும் இல்லன்னா கோழிக்கூடு , நாட்டு வாழைப்பழம் அல்லது நாலு ஏலக்கி இல்லன்னா நாலு பூலாச்சுண்டு வாழைப்பழம் பயன்படுத்தலாம் )

7. அரை தேக்கரண்டி சோடா உப்பு 

8. ஒரு சிட்டிகை உப்பு 

9. அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா 

10. மூணு ஏலக்காய் பொடி பண்ணியது 


சர்க்கரையும் ஏலக்காயும் மிக்சியில் பொடி செய்து கொள்ளுங்கள். அப்புறம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து  நல்லா கலக்கி 10 நிமிஷம் அப்படியே விட்டுருங்க. 


குக்கரில் செய்முறை:


குக்கரை லேசா சூடாக்கி நெய் தடவி லைட்டா மைதா மாவை தூவி விடவும். கலக்கி வைத்திருக்கிற மாவை அப்படியே அதுல கொட்டி கொஞ்சம் நறுக்கின பாதாம் முதிரி பருப்பு பேரிச்சம்பழம் தூவிக்கோங்க குக்கரை மூடி ( குக்கர் வெயிட் வைக்க கூடாது ) அடுப்புல சிம்மில் ஒரு 10 நிமிஷம் வைத்துவிட்டு. அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து அதன் மேலே குக்கரை தூக்கி வைத்துவிட்டு சிம்மில் ஒரு 15 நிமிஷம் வைக்கவும். 


அவ்வளவுதான் சுவையான கேக் தயார்.


ஓவெனில் செய்யும் முறை :


10 நிமிஷம் 160 டிகிரி செல்ஷியஸ் வைத்து preheat செய்யவும். அப்புறம் ஒரு கேக் பிளேட்டுல நெய் தடவி மைதா தூவி கலந்து வைத்துள்ள மாவை கொட்டி கொஞ்சம் நறுக்கின பாதாம் முதிரி பருப்பு பேரிச்சம்பழம் தூவிக்கோங்க 

160 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில 25 நிமிஷம் வைக்கவும் அவ்வளவுதான் கேக் ரெடி. 






Monday, June 14, 2021

நம்ம ஊரு பரோட்டா

நம்ம ஊரு பரோட்டா கொஞ்சம் வித்யாசமாவும் வயிறுக்கு கேடு இல்லாமலும் செய்யவது எப்பிடின்னு சில பல முயற்சிகள் பண்ணி கத்துக்கிட்டேன். நீங்களும் செய்து பாருங்களேன்?

சுத்தமா வயிறுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னா கோதுமை மாவு எடுத்துக்கோங்க. இல்லையா நம்ம மைதாவை எடுங்க. ஒருத்தர் சாப்பிட 2 கப் போதும். (கப் சைசு சாப்பிடறவுங்க வயிறு சைஸ பொறுத்தது)

கோதுமை / மைதா - 2 கப் 
நெய் - 2 தேக்கரண்டி 
உப்பு கொஞ்சம் (கொஞ்சூண்டு போதும் அள்ளி  கொட்டிராதீங்க)
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி 
தண்ணீர் - 1/2 கப் 

அவ்ளோதான். சோடா உப்பு தயவு செய்து பயன் படுத்தாதீங்க.

மாவை ஒரு பாத்திரத்துல போட்டு லேசாக உப்பை தூவிக்கணும். கைய்ய வச்சு கலந்துட்டு ரெண்டு கரண்டி நெய்யவிட்டு கலந்து கொஞ்ச கொஞ்சமா தண்ணியை சேத்து பிசையவும். லேசா கையில ஓட்ட தான் செய்யும் அதுக்கெல்லாம் மனசு சோர்ந்து போகாம நம்ம அழகா இருக்கோமோ இலையோ மாவை அழகாய் பிசையணும் (பெரிய  ண வா சின்ன ன வானு தெரியலையே ) (சரி இப்போ பாக்குறவுங்க இதை மன்னிக்க மாட்டாங்களா என்ன)

பிசைஞ்சு ஒரு மூடிய வச்சு மூடிவச்சுட்டு அல்லிமலர்க்கொடி அங்கதமே ஒட்டாத சந்தனமென்னு பாட்டை  பாடிகிட்டே குருமாவை செஞ்சிருங்க 

இப்போ பிசைஞ்சு வச்சிருக்கிற மாவு பாஸ் நீங்க என்ன சொல்லறீங்களோ அதை செய்யிறேன்னு ரெடியா இருக்கும் அதை நல்லா ஆதி அடின்னு அடிச்சு கையில எடுத்து அது இருந்த பாத்திரத்துல மாவை போட்டு அப்பிடியே தொவைக்கணும். அது ரொம்ப மிருதுவா ஆயிரும். கொஞ்சம் எண்ணெய்ய நல்லா அது மேல தடவிட்டு வலது கையிலே பிசைந்து வைத்துள்ள மாவை அள்ளி காற்றை புகுத்தி இடது கையில சின் முத்திரை பண்ணிக்கோங்க  அந்த 0 வடிவத்துக்குள்ள நுழைத்து  பந்து போல சின்ன சின்ன உருண்டை  செய்து அது மேல எண்ணையை பூசி மூடிவைச்சிருங்க.

அப்புறம் பூரி கட்டையில அதை பெரிய சப்பாத்தியா உருட்டி  மேல எண்ணையை பூசி காத்தாடி போல மடிச்சு சுருட்டீருங்க. எல்லா உருண்டையையும் அது போலவே செய்யுங்க. 

அப்புறம் கோசம் கெட்டியான சப்பாத்தி போல திரட்டி தோசைக்கல்லுல கோசம் தாராளமா எண்ணெய் விட்டு சுட்டு எடுத்துட்டா பரோட்டா ரெடி.