வாழைப்பழ ரவை கேக் ( Banana Sooji Cake )
தந்தையர் தின நல்வாழ்த்துக்கள்.
இன்னைக்கு தந்தையர் தின சிறப்பாக வீட்டுல வாழைப்பழ ரவை கேக் செஞ்சு இன்ப அதிர்ச்சி ஊட்ட நினைக்கிறவங்களுக்காக தான் இந்த சமையல் குறிப்பு.
இதை குக்கர்லேயும் செய்யலாம் இல்லன்னா ஓவென்லேயும் செய்யலாம்.
தேவையான பொருள்களை முதல்ல சொல்லிர்றேன்.
1. ரெண்டு கப் ரவை
2. ஒரு கப் மைதா
3. ஒரு கப் சர்க்கரை/ வெல்லத்தூள்
4. ஒரு கப் பால்
5. அரை கப் எண்ணெய் ( தேங்காய் எண்ணெய் இல்லேன்னா அரை கப் நெய்)
6. மூணு வாழைப்பழம் ( பச்சை நாடன் என்கிற மோரிஸ் பழம் இதுக்கு பசரியா இருக்கும் இல்லன்னா கோழிக்கூடு , நாட்டு வாழைப்பழம் அல்லது நாலு ஏலக்கி இல்லன்னா நாலு பூலாச்சுண்டு வாழைப்பழம் பயன்படுத்தலாம் )
7. அரை தேக்கரண்டி சோடா உப்பு
8. ஒரு சிட்டிகை உப்பு
9. அரை தேக்கரண்டி பேக்கிங் சோடா
10. மூணு ஏலக்காய் பொடி பண்ணியது
சர்க்கரையும் ஏலக்காயும் மிக்சியில் பொடி செய்து கொள்ளுங்கள். அப்புறம் எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்து நல்லா கலக்கி 10 நிமிஷம் அப்படியே விட்டுருங்க.
குக்கரில் செய்முறை:
குக்கரை லேசா சூடாக்கி நெய் தடவி லைட்டா மைதா மாவை தூவி விடவும். கலக்கி வைத்திருக்கிற மாவை அப்படியே அதுல கொட்டி கொஞ்சம் நறுக்கின பாதாம் முதிரி பருப்பு பேரிச்சம்பழம் தூவிக்கோங்க குக்கரை மூடி ( குக்கர் வெயிட் வைக்க கூடாது ) அடுப்புல சிம்மில் ஒரு 10 நிமிஷம் வைத்துவிட்டு. அடுப்பின் மீது தோசைக்கல்லை வைத்து அதன் மேலே குக்கரை தூக்கி வைத்துவிட்டு சிம்மில் ஒரு 15 நிமிஷம் வைக்கவும்.
அவ்வளவுதான் சுவையான கேக் தயார்.
ஓவெனில் செய்யும் முறை :
10 நிமிஷம் 160 டிகிரி செல்ஷியஸ் வைத்து preheat செய்யவும். அப்புறம் ஒரு கேக் பிளேட்டுல நெய் தடவி மைதா தூவி கலந்து வைத்துள்ள மாவை கொட்டி கொஞ்சம் நறுக்கின பாதாம் முதிரி பருப்பு பேரிச்சம்பழம் தூவிக்கோங்க
160 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில 25 நிமிஷம் வைக்கவும் அவ்வளவுதான் கேக் ரெடி.


