நம்ம ஊரு பரோட்டா
நம்ம ஊரு பரோட்டா கொஞ்சம் வித்யாசமாவும் வயிறுக்கு கேடு இல்லாமலும் செய்யவது எப்பிடின்னு சில பல முயற்சிகள் பண்ணி கத்துக்கிட்டேன். நீங்களும் செய்து பாருங்களேன்?
சுத்தமா வயிறுக்கு எந்த பிரச்னையும் வரக்கூடாதுன்னா கோதுமை மாவு எடுத்துக்கோங்க. இல்லையா நம்ம மைதாவை எடுங்க. ஒருத்தர் சாப்பிட 2 கப் போதும். (கப் சைசு சாப்பிடறவுங்க வயிறு சைஸ பொறுத்தது)
கோதுமை / மைதா - 2 கப்
நெய் - 2 தேக்கரண்டி
உப்பு கொஞ்சம் (கொஞ்சூண்டு போதும் அள்ளி கொட்டிராதீங்க)
தேங்காய் எண்ணெய் - 50 மில்லி
தண்ணீர் - 1/2 கப்
அவ்ளோதான். சோடா உப்பு தயவு செய்து பயன் படுத்தாதீங்க.
மாவை ஒரு பாத்திரத்துல போட்டு லேசாக உப்பை தூவிக்கணும். கைய்ய வச்சு கலந்துட்டு ரெண்டு கரண்டி நெய்யவிட்டு கலந்து கொஞ்ச கொஞ்சமா தண்ணியை சேத்து பிசையவும். லேசா கையில ஓட்ட தான் செய்யும் அதுக்கெல்லாம் மனசு சோர்ந்து போகாம நம்ம அழகா இருக்கோமோ இலையோ மாவை அழகாய் பிசையணும் (பெரிய ண வா சின்ன ன வானு தெரியலையே ) (சரி இப்போ பாக்குறவுங்க இதை மன்னிக்க மாட்டாங்களா என்ன)
பிசைஞ்சு ஒரு மூடிய வச்சு மூடிவச்சுட்டு அல்லிமலர்க்கொடி அங்கதமே ஒட்டாத சந்தனமென்னு பாட்டை பாடிகிட்டே குருமாவை செஞ்சிருங்க
இப்போ பிசைஞ்சு வச்சிருக்கிற மாவு பாஸ் நீங்க என்ன சொல்லறீங்களோ அதை செய்யிறேன்னு ரெடியா இருக்கும் அதை நல்லா ஆதி அடின்னு அடிச்சு கையில எடுத்து அது இருந்த பாத்திரத்துல மாவை போட்டு அப்பிடியே தொவைக்கணும். அது ரொம்ப மிருதுவா ஆயிரும். கொஞ்சம் எண்ணெய்ய நல்லா அது மேல தடவிட்டு வலது கையிலே பிசைந்து வைத்துள்ள மாவை அள்ளி காற்றை புகுத்தி இடது கையில சின் முத்திரை பண்ணிக்கோங்க அந்த 0 வடிவத்துக்குள்ள நுழைத்து பந்து போல சின்ன சின்ன உருண்டை செய்து அது மேல எண்ணையை பூசி மூடிவைச்சிருங்க.
அப்புறம் பூரி கட்டையில அதை பெரிய சப்பாத்தியா உருட்டி மேல எண்ணையை பூசி காத்தாடி போல மடிச்சு சுருட்டீருங்க. எல்லா உருண்டையையும் அது போலவே செய்யுங்க.
அப்புறம் கோசம் கெட்டியான சப்பாத்தி போல திரட்டி தோசைக்கல்லுல கோசம் தாராளமா எண்ணெய் விட்டு சுட்டு எடுத்துட்டா பரோட்டா ரெடி.
பரோட்டா மிகச்சிறப்பு!! நகைச்சுவை கலந்த அருமையான எளிய விளக்கம் :)
ReplyDeleteமிக்க நன்றிமா
Deleteஇதை படித்தாலே பரோட்டா சாப்பிட்ட மாதிரி இருக்குது😀😀
ReplyDelete